×

வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநகராட்சி பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து கலந்துரையாடல்

ஈரோடு,மார்ச்4: அரசுப்பள்ளிக் கல்வித் துறையில் செயல்பட்டு வரும் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கால்நிலை மாற்ற ஆய்வாளர் பிரகாஷ் தங்கவேல் பங்கேற்று, ”காலநிலை மாற்றம் நமது வாழ்வியல், பொருளாதாரம், வாழ்க்கை தரம் மற்றும் இவை அனைத்தையும் உருவாக்கி ஆதரிக்கும் இயற்கைச் சூழலையும் பெருமளவில் பாதிக்கிறது.உலகெங்கும் கடுமையான வெப்பநிலை, தீவிர மழைப்பொழிவு மற்றும் வறட்சி அதிகரித்து வருகிறது. சமீபத்திய எடுத்துக்காட்டாக தமிழகத்தின் பெரும் பகுதிகளை செழிப்பாக வைத்திருக்கும் காவிரி ஆற்றின் நிலையை காணலாம்.கடந்த 2016 முதல் 2018 ஜூன் வரை காவிரி கடும் வறட்சிக்குள்ளானது. தொடர்ந்து, 2018 ஆகஸ்ட்டில் வரலாறு காணாத வெள்ளம் (2.6 லட்சம் கன அடி) காவிரியில் ஏற்பட்டது. 2022ல் காவிரியில் தொடர்ந்து 3 முறை கடும் வெள்ளப் பெருக்கு (2 லட்சம் கன அடிக்கு மேல்) ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பருவம் தப்பிய மழையும் கடும் வெயிலும், பனிப்பொழிவும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளால் வேளாண்மையும் ஆறுகளை சார்ந்து உள்ள தொழிற்சாலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவு மற்றும் பொருள் உற்பத்தியும் குறைந்து வருகிறது. தவிர, காலநிலை மாற்றத்தால் வாழ்விடங்கள், வாழ்வாதாரம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களில் தொடங்கி உலகில் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வரும் காலங்களில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளான சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், தேவையான உணவு மற்றும் பாதுகாப்பான வாழ்விடம் போன்றவை பெரிய அளவில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படையாமல் இருக்க நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என எடுத்துரைத்தார்.இதில், ரயில்வே காலனி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Thanksgiving ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது