×

நீடாமங்கலத்தில் திடீர் மழை

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பருவம் தவறிய மழை பெய்தது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் நீரில் மூழ்கி தரையில் படிந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனால் அரசு பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. இந்த மழை 45 நிமிடம் பெய்ததால் அறுவடை பணிகள் பாதிப்படைந்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Tags : Neetamangalam ,
× RELATED நீடாமங்கலம் முருகர் கோயில்களில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு