×

ஜெயங்கொண்டத்தில் ரூ.29 கோடியில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடப்பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டிடக் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் “ஏற்றமிகு ஏழு திட்டங்களின்” கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பணி ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ரூ.1136 கோடி மதிப்பீட்டில் 44 பல்வேறு மருத்துவமனை கட்டங்களுக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி விழா பேரூரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர்.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், தலைமை மருத்துவ அலுவலர் உஷா, நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Jayangonda ,
× RELATED பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதில்...