×

கூட்டுறவு மருத்துவமனை மேம்பாட்டு வளர்ச்சிக்கு நிதி வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தில் உள்ள தளவாய்புரம் ஆ.ச.பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு மருத்துவமனை மேம்பாட்டு வளர்ச்சிக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் வளர்ச்சி வங்கியில் இருந்து அதன் தலைவர் பரிமேல்அழகன் மற்றும் வங்கியின் மேலாண்மை இயக்குனர்/கூடுதல் பதிவாளர் சந்திரசேகர் ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை சுகாதார மருத்துவமனை தலைவர் பழனிச்சாமியிடம் வழங்கினார். உடன் வங்கியின் இணைப்பதிவாளர்/பொது மேலாளர்(திட்டம் மற்றும் திட்டமிடுதல்) ஹேமா மற்றும் வங்கியின் இணைப்பதிவாளர்/பொது மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்)ஆனந்தி ஆகியோர் உள்ளனர். மேலும் இந்நிகழ்வின் போது ஆஞ்சநேயர் கோயில் அறக்கட்டளையில் இருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் தளவாப்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கூட்டுறவு மருத்துவமனையின் வளர்ச்சி க்கு வழங்கப்பட்டதற்கு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

Tags : -operative Hospital ,
× RELATED தவறான ஊசி செலுத்தியதால் இளைஞர்...