×

சிகே கல்லூரியில் நிறுவனர் தின விழா

கடலூர், பிப். 28:கடலூர் செல்லங்குப்பத்தில் அமைந்துள்ள சிகே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்லூரியின் நிறுவனர் மறைந்த சின்னி கிருஷ்ணன் 92வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரியின் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு மாணவர்களின் அறிவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக சிகே ஹேக்கத்தான், ப்ராஜெக்ட் எக்ஸ்போ, வணிகத் திட்ட விளக்கக்காட்சி மற்றும் சிறந்த கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிய கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகள் மாணவர்களுக்கு நடைபெற்றன. சிகே. கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அமுதவள்ளி ரங்கநாதன் வழிகாட்டுதலின்படி கல்லூரி நிர்வாகக் குழுவால் விழா ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக டாக்டர் பி. உமா மகேஸ்வரி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் சிகே ஹேக்கத்தானில் வெற்றிபெற்ற மாணவர்களின் இரண்டு சிறந்த கண்டுபிடிப்புகளை அடல் இன்குபேஜன் சென்டர், அண்ணா பல்கலைக்கழகம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொண்டு தொழில் தொடங்க தேவையான உதவிகளை வழங்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரியால் அறிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் அருளாளன், மனித வளத்துறையின் மேலாளர் கௌரி மற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Founder's Day ,CK College ,
× RELATED வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் நிறுவனர் தின கொண்டாட்டம்