×

சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் திறனறி திருவிழா

கடலூர், பிப். 28: கடலூர் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறனறி திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்தூரி சொக்கலிங்கம், பள்ளி செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், நிர்வாக அலுவலர் சிவராஜ் மற்றும் துணை முதல்வர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். திறனறி திருவிழாவில் அடுப்பில்லா சமையல், மெஹந்தி, ரங்கோலி, தனிநடிப்பு, பாரம்பரிய நடனம், சிறந்த தந்தை, சிறந்த தாய் போன்ற போட்டிகள் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சியின்போது போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் உதயகுமார்சாம் வரவேற்றார். திறனறி திருவிழா நடைபெற்ற நிலையில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை பதிவுகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Disability Festival ,Saraswati ,Vidyalaya School ,
× RELATED ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம்