×

சேலம் மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து அதிகரிப்பு

சேலம்: வட மாநிலங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து அதிகரிப்பால் விற்பனை நல்லமுறையில் இருப்பதாக வியாபாரிகள் ெதரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பூண்டு பல மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு பெய்த மழையால் வட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பூண்டு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு தினசரி 50 முதல் 70 டன் பூண்டு விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு விற்பனைக்கு வரும் பூண்டை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ பூண்டு தரத்தை பொறுத்து ₹50 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Salem Market ,
× RELATED லாரி கவிழ்ந்ததால் 10 டன் தக்காளி ரோட்டில் சிதறியது