மன்னார்குடி, பிப். 26: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரப் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் தங்கபாபு தலைமையில் கோட்டூரில் நேற்று நடந் தது. கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித் தார்.கூட்டத்தில், பிப்ரவரி 28 ல் தமிழக முதல்வருக்கு ஆசிரியர்களின் கோரிக் கைகள் அடங்கிய 1 லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் நிகழ்வில் கூட்டணியின் அனைத்து ஆசிரியர்களும் அஞ்சல் அட்டைகளை தவறாமல் அனுப்புவது, கோட்டூர் வட்டாரக் கிளையின் புதிய பொறுப்பாளர்கள் தேர்தல் மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்றும், குஜராத்தில் மே12, 13 தேதிகளில் அகில இந் திய ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் கோட்டூர் வட்டாரத்தில் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட வல்லூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி,ஆசிரியர் சுரேஷ்,கவிதைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற தலைமை ஆசிரியை செல்வ மணி, எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி மாவட்ட கலெ க்டரால் பாராட்டுப் பெற்ற வல்லூர் பள்ளியின் ஆசிரியை ரம்யா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக வட்டார செயலாளர் பாரதி வரவேற்றார். வட்டாரப் பொருளாளர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.
