×

சாலையோரம் புளிய மரத்தில் அருவிபோல் கொட்டிய தண்ணீர் பொதுமக்கள் பார்த்து வியப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், பிப்.26: குடியாத்தம் அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தில் இருந்து திடீரென அருவிபோல தண்ணீர் கொட்டியது. இதனை அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே குடியாத்தம்- வேலூர் சாலையில் உள்ள புளிய மரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் சுமார் 4 அடி உயரத்தில் மரத்தில் நடுவில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டியது. இதனை கண்டதும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்து சென்றனர். தகவல் அறிந்து வந்த பொதுமக்களும் புளியமரத்தில் இருந்து தண்ணீர் வருவதை பார்த்து வியந்தனர்.

மேலும் புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால் குழாய் சேதம் ஏற்பட்டு தண்ணீர் வரலாம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை 6 மணி வரையிலும் கூட தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. தற்போது பகலில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் புளிய மரத்தில் இருந்து திடீரென அருவி போல் தண்ணீர் கொட்டி தகவல் நேற்று வேப்பூர் கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Kudiyattam ,
× RELATED கோடை மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் குடியாத்தம் அருகே