×

அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை, குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம்

அந்தியூர், பிப். 22: ஈரோடு மாவட்டம் அந்தியூர், சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட அந்தியூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு புகையிலை மற்றும்
தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், புகையிலை தடுப்பு சட்டங்கள், தேசிய குடற்புழு நீக்க தின அவசியம், முக்கியத்துவம், குடற்புழுவினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், குடற்புழு தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறைகள், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ளும் வழிமுறைகள், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள், கொசு உற்பத்தியாகும் விதம் மற்றும் கொசு ஒழிப்பு வழிமுறைகள், வளர் இளம் பருவ பெண்களின் உணவு மற்றும் பாதுகாப்பு முறைகள், மனநலம் குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் டாக்டர் கலைச்செல்வி, சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரகாசம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர்.  புகையிலை தடுப்பு மற்றும் தேசிய குடற்புழு நீக்க தின உறுதிமொழிகள் அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags : Antur Government Higher School ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது