குடியரசு தின விளையாட்டு போட்டியில் மாணவிகள் சாதனை

ஓசூர்: திருச்சிராப்பள்ளி தனியார் கல்லூரியில் 2வது மாநில அளவிலான இளையோர் பிரிவு மாணவிகளுக்கான, 2022-2023 குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில், ஓசூர் அரசு உதவி பெறும் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பூப்பந்துப் போட்டியில் முதலிடமும் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டியில் 3வது இடமும் பிடித்து, பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ஏஞ்சலா, தலைமையாசிரியை ஜெயந்தி, ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories: