×

சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!

அமெரிக்கா: உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலை சோஃபி டியாவோ என்ற டூடுல் கலைஞர் உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்தியலாக மகளிர்க்காக முதலீடு செய்வோம்: வளர்ச்சியை வேகப்படுத்துவோம் (‘Invest in Women: Accelerate Progress) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு டூடுலில், ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு வயதான பெண்மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த டூடுல் ஒரு பெண் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டதை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

The post சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!! appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Google ,USA ,Independence Day ,Republic Day ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!