வேலூர் மண்டலம் சார்பில் ஆயுத பூஜை முன்னிட்டு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வேலூர், செப்.24: ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் பஸ்கள் பூந்தமல்லி பைபாஸ் சாலை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோல் அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் ஆயுத பூஜைக்காக வேலூருக்கு 30 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டுக்கு 15 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூருக்கு 30 சிறப்பு பஸ்களும், குடியாத்தத்துக்கு 20 சிறப்பு பஸ்களும், ஓசூருக்கு 30 பஸ்களும், தருமபுரிக்கு 25 சிறப்பு பஸ்களும் என 150 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: