×

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் உதய தங்க கருடசேவை

சீர்காழி, செப்.13: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காழி ஸ்ரீ ராம விண்ணகரம், ஸ்ரீ திருவிக்ரம பெருமாள் என அழைக்கப் படும் தாடாளன் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசத்தலங்களில் 28வது ஸ்தலமாக அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் பவித்திர உற்சவம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடை பெற்றன.

 5-ம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

Tags : Udaya Thanga Garudaseva ,Sirkazhi Tatalan Perumal Temple ,
× RELATED ஓடும் ரயிலில் தொழிலாளி சாவு