ஓணம் பண்டிகையையொட்டி நாளைய தினம் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் வரை மட்டும் செயல்படும்

சேலம், செப்.7:ஓணம் பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளைய தினம் மதியம் வரை மட்டும் செயல்படும் என கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் திருவிழா நாளை (8ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் இயங்கும் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் முன்பதிவு மையங்கள், நாளை ஒருநாள் மதியம் வரை மட்டும் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், டவுன், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திருப்பத்தூர், பொம்மிடி உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இயங்கும் முன்பதிவு மையங்கள், 8ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை இயக்கம்போல்) மட்டும் செயல்படும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: