×

காவல் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 28 பேருக்கு அடிப்படை பயிற்சி

தூத்துக்குடி, செப். 2: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவல் துறை மற்றும் அமைச்சுப்பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளராக பணி நியமனம் வழங்கி உள்ளது. இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட 28 பேருக்கான 3 மாத அடிப்படை பயிற்சி, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமார், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மக்கள் தொடர்பு அதிகாரி சத்யநாராயணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்