×

திருமுருகன்பூண்டியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர்,ஆக.26: திருமுருகன்பூண்டி திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திருப்பூர் திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திருப்பூர் குமார் நகரில் இருந்து காரில் திருமுருகன்பூண்டிக்கு புறப்பட்டார். அப்போது திருமுருகன்பூண்டி நகராட்சி அருகே நகராட்சித் தலைவர் குமார் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செண்டை மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில், திருமுருகன்பூண்டி நகர திமுக செயலாளர் கிருஷ்ணசாமி என்கிற மூர்த்தி, துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் பாரதி, சம்சாத்பேகம், முருகசாமி, ராஜன், யுவராஜ், சுஜினி, மதிவாணன், பூங்கோதை, மகேஸ்வரி, கதிர்வேல், கோகிலா, லீலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thirumuruganbuundi ,
× RELATED அந்தஸ்து உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சியை கைப்பற்றியது திமுக