×

சீர்காழி அருகே மேலையூரில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் சிறப்பு வழிபாடு

சீர்காழி, ஆக. 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் தமிழர்களின் கடவுளாக போற்றப்படும் கண்ணகி பிறந்த ஊர் மேலும் இவர் தனது வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகார காவியம் கூறுகிறது. இத்தகைய சிறப்புபெற்ற கண்ணகி தெய்வத்திற்கு பூம்புகார் மேலையூரில் கோயில் உள்ளது. இவர் ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி வைகுண்டம் (வைகுண்ட பதவி) சென்றதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த நாளை கண்ணகி வீடுபேறு அடைந்த நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது வீடுபேறு அடைந்தநாள் கண்ணகிகோயிலில் நடந்தது. இதனையொட்டி பால், வாசனை திரவியங்கள். பன்னிர் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யபட்டு அர்ச்சனைகள் நடந்தன. மேலும் காவிரி ஆறு வளம் செழிக்கவேண்டி யாககுடங்களை வைத்து மலர்களால் அர்ச்சனை செய்யபட்டது. பின்னர் தீபாராதனை காட்டபட்டு பிரசாதங்கள் வழங்கபட்டன. நிகழச்சியில் கண்ணகி கோட்ட காப்பாளர் ராஜசேகரன், புலவர் சோமசுந்தரம், னிவாசா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சத்தியமுர்த்தி. துணை தலைமையாசிரியர் ரவி பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kannagi ,Melayur ,Sirkazhi ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...