×

எம்எல்ஏ பூண்டி.கலைவாணன் பங்கேற்பு கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூலை 27: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் நடத்தப்படும் பட்டய பயிற்சிக்கு நாளைக்குள் (28ம் தேதி) விண்ணப்பிக்குமாறு மண்டல இணைப்பதிவாளர் சித்தரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான பயிற்சிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பெறுவதன் மூலம் வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பணியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். விண்ணப்பிக்க வயது வரம்பாக வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிபடி 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சி பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் அஞ்சல் வழி பயிற்சியும் வழங்கப்படும் நிலையில் கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவு பட்டய பயிற்சி இல்லாமல் பணியில் சேர்ந்துள்ள சங்க நிரந்தர பணியாளர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். எனவே இந்த முழு நேர பயிற்சி விண்ணப்பத்தினை நாளை (28ந்தேதி)க்குள்ளும், அஞ்சல் வழி பயிற்சிக்கான விண்ணப்பத்தினை அடுத்த மாதம் 4ம் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து மேற்படி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலும் விபரங்கள் அறிந்திட 9486605009 என்ற கைபேசி எண்ணிலும், 04366_227233 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மண்டல இணை பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்