×

காமராஜர் சிலைக்கு மரியாதை

விருதுநகர், ஜூலை 27: விருதுநகர் காமராஜர் நினைவில்லத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காமராஜர் துவக்கி வைத்த திட்டங்கள் வலிமைப்படுத்த வேண்டும். சிவகாசி மக்களின் வாழ்வாதரமாக விளங்கும் பட்டாசு தொழில் தொடர் விபத்துகள், புதிய திட்டங்களால் நலிந்துள்ளது. சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மக்களுக்கு அன்னதானம் வசதி செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் வன்முறையாக மாறியிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் போக்கும் வகையில் கவுன்சலிங் வழங்க வேண்டும். இதில், கல்வித்துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Kamaraja Idol ,
× RELATED காமராஜர் சிலைக்கு மரியாதை