சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

உடுமலை, ஜூன் 14: உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உடுமலை- பொள்ளாச்சி சாலையில், கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையின் தென்புறம் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதாரகேடு ஏற்படுவதோடு, நகருக்குள் நுழையும்போது துர்நாற்றம் காற்றில் பரவி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.உடுமலை நகரில் இருந்தும், அருகாமையில் உள்ள ஊராட்சி பகுதிகளில் இருந்தும் மண்டப கழிவுகள், ஓட்டல் கழிவுகள், கோழி, ஆடு, மாடு, மீன் இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.இந்த இடத்தை சுத்தம் செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இனி, இப்பகுதியில் குப்பைகளை கொட்டாமல் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் நபர்களை கண்டறிந்து, ரூ.5 ஆயிரம் அபராதமும், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: