×

சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா

குமாரபாளையம், மே 13: குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாயக்கன்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. தளிர்விடும் பாரதம் சேவை அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை வாழ்த்தி பேசினார். விழாவில் செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் தன்னார்வலர்கள் ராஜ்குமார், செந்தில், வரதராஜ், மோகன்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Nurse's Day ,Health Center ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...