×

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப். 21: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர்கள் ராமன், ராஜேஸ்வரி, வடக்கு வட்டகிளை தலைவர் விஸ்வநாதன், தெற்கு வட்ட கிளை பொறுப்பாளர் நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இவை அனைத்தையும் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழக முதல்வர் நிறைவேற்றி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

தாராபுரம்: தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட கிளை சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தில்லையம்மன் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்க சார்ந்த ராமசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் மணி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட இணைச்செயலாளர் மணிமொழி, மாவட்ட இணைச் ெசயலாளர் மேகலிங்கம், வட்டக் கிளை இணைச்செயலாளர் ராணி உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அதேபோல அவிநாசி தாலுகாஅலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கருப்பன், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சுமதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒன்றிய துணைத்தலைவர் பரிமளா நன்றி கூறினார்.

Tags : Government Employees Union Demonstration ,
× RELATED தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்