×

வாட்ஸ்அப்பில் ஆபாச படங்களை அனுப்பிய 2 பேர் கைது

கடலூர், ஏப். 21: பண்ருட்டியை சேர்ந்த, கணவனை இழந்த பெண் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கடந்த 8.8.2021 அன்று வீட்டிலிருந்தபோது, அங்குச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, நான் ஒரு ஆண் நபருடன் இருப்பதுபோல, ஆபாசமான படங்களை, அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி யாரோ வைத்துள்ளார் என்றும், இது பற்றி செய்தி உனக்கு தெரியுமா? என்றும் என்னிடம் கேட்டார். ஆனால் அதுபற்றிய விபரம் எனக்கு ஏதும் தெரியாது என்று கூறினேன். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, அந்த ஆபாச படங்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பிவைத்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இந்நிலையில் எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும், ஓய்வுபெற்ற ஆசிரியர் மகன், என்னையும், அவரையும், ஆபாசமாக சித்தரித்து, அந்த படங்களை, யாரோ ஒரு நபர், அவரது அப்பாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளதாக கூறினார். எனவே, என்னை பற்றி பொய்யாக சித்தரித்து, ஆபாச படம் வெளியிட்ட, நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையவழி குற்றபிரிவு) இளங்கோவன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அய்யப்பன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பண்ருட்டி தாலுகா கே.குச்சிபாளையம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தங்கதுரை என்பவர், அந்த பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்க அழைத்தபோது, அவர் மறுப்பு தெரிவித்ததால், கோபமடைந்து அந்த பெண்ணை, மானபங்கம் படுத்த வேண்டும் என முடிவு செய்து, அந்த பெண்ணின் புகைப்படத்தையும், அவரின் எதிர் வீட்டில் வசிக்கும் இளைஞரின் புகைப்படத்தையும், எழிலரசன் என்பவர் உதவியுடன் ஆபாசமாக சித்தரித்து, அந்த பெண் வேலை பார்க்கும் செங்கல் சூலை உரிமையாளருக்கும், எதிர் வீட்டில் இருக்கும் இளைஞரின் தந்தைக்கும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைத்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கதுரை, எழிலரசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை