×

கள்ளக்குறிச்சி நகராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆணையர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள 412 கிராம ஊராட்சி, 7 பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆலோசனை கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேலம் மெயின்ரோடு, கச்சேரிசாலை பிரதான கால்வாய், ஏமப்பேர்-தென்கீரனூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி ஆணையர் குமரன் நேரில் ஆய்வு செய்து வடிகால் வாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை முழுமையாக அகற்றும்படி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் உடனிருந்தார்….

The post கள்ளக்குறிச்சி நகராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kolakkurichi ,Kallakkurichi ,Kallakkurichi District ,Dinakarukei ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...