×

காழியப்பநல்லூரில் தீயணைப்பு நிலைய புதிய கட்டிடம், குடியிருப்பு வளாகம்

தரங்கம்பாடி, ஏப்.13: காழியப்பநல்லூர் ஊராட்சியில் ரூ.3.66 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அலுவலர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வளாகம், கண்காணிப்பு நிலையம் ஆகிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், காழியப்பநல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்பு விழாவில் தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, காவலர் வீட்டு வசதி உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சுந்தர், தொழில்நுட்ப உதவியாளர் அன்புசெழியன், மாவட்ட அலுவலர்கள், தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர் துரை, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணாசங்கரி, ஊராட்சி தலைவர்கள் கருணாநிதி, ஜெயமாலதி சிவராஜ், பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, நிலைய அலுவலர் மொஜிசன், சிறப்பு நிலை அலுவலர் அருண்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kazhiyappanallur ,
× RELATED மயிலாடுதுறை அருகே காழியப்பநல்லூரில்...