×

அதியமான் அரசு பள்ளியில் தேர்வு வினாத்தாள் அறை தயார்படுத்தும் பணி தீவிரம்

தர்மபுரி, ஏப்.8: தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு மே 6ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மே 6ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையும், பிளஸ் 2 தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரையும் நடக்கிறது. பொது தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்கும் அறையை, தயார் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில், அனைத்து பள்ளி பொது தேர்வுகளுக்கான வினாத்தாள் வைக்கும் அறைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா தொற்றுக்கு பின், தற்போது நேரடி தேர்வுகள் நடக்க உள்ளது. இதன்படி 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மே முதல் வாரத்தில் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று தர்மபுரி மாவட்டத்திற்கு கல்வி துறையால் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் அனைத்தும், அதியமான் அரசு பள்ளியில் தனி அறை அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.


கம்பைநல்லூர் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகம்

அரூர், ஏப்.8: கம்பைநல்லூர் பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3 மாத கால பயிரான கொத்தமல்லி, தழையாகவும், அதன் விதை பொடியாக்கியும் உணவில் சேர்க்கப்படுகிறது. ஜீரண சக்தி, வாயுத்தொல்லை, செரிமான கோளாறு, உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. தர்மபுரி மாவட்டத்தை தவிர ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பெரிய கட்டு கொத்தமல்லி ₹10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொத்தமல்லி செடியில் பூக்கள் பூத்து வயல் முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் விதையாக முற்றி அறுவடை துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Adiyaman Government School ,
× RELATED தகராறு செய்த 4 பேர் கைது