×

ஆடுகள் விற்பனை ஜோர்

 

ஓமலூர், மே 26:ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள காருவள்ளியில் நேற்று ஆட்டுசந்தை கூடியது. தற்போது ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் குலதெய்வ திருவிழாக்கள் துவங்கியுள்ளது. இதில் குலதெய்வத்திற்கு ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். மேலும், உறவினர்களை அழைத்து கிடா வெட்டி கறி விருந்து வைக்கபடும். அதனால், சந்தையில் கிராம மக்கள் கருப்பு நிற ஆடுகளை அதிகளவில் வாங்கினர்.

தற்போது மழை காரணமாக, வறட்சி நீங்கி மேய்ச்சல் நிலம் உருவாகி உள்ளதால், ஆடு வளர்ப்புக்கு ஏற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், வளர்ப்புக்கு தேவையான குட்டி ஆடுகளும் அதிகமாக விற்பனை ஆனது. அதனால் ஆடுகள் விற்பனையும், விலையும் அதிகரித்தது. வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.5 ஆயிரத்துக்கும், இறைச்சி ஆடுகள் ரூ.9,500 முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஓமலூர், காருவள்ளி சந்தைகளில் சுமார் ரூ.2.65 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆடுகள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Goats for Sale ,Omalur ,Karuvalli ,Gadayampatti taluk ,Kulatheiva ,Kadaiyambatti ,Dharamangalam ,Goats for Sale Jour ,
× RELATED ஓமலூர் அருகே காருவள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்..!!