×

கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

 

சேலம், மே 27: சேலம் மாநகர பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், அஸ்தம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், மரவனேரி சாலைக்கு செல்லும் சுந்தர்லாட்ஜ் பகுதியில் சோதனை நடத்தியபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், சேலம் வீராணம் போயர்தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (26), களரம்பட்டி நேதாஜிதெருவை சேர்ந்த நாகராஜன் மகன் இளையராசு (25) எனத்தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, 2 பைக், 2 செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் அவர்கள் இருவரும், சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து விற்றுள்ளனர். அதனால், அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கைதான மணிகண்டன், இளையராசு ஆகிய இருவரையும் சேலம் ஜே.எம்.3 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சேலம் மாநகர பகுதியில் போதை பொருள் தடுப்பு பிரிவு ேபாலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Narcotics Control Unit ,Inspector ,Babusureshkumar ,Astampatti ,
× RELATED கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் கைது..!!