×

தகராறு செய்த 4 பேர் கைது

 

சேலம், மே.29: சேலம் பொன்னம்மாப்பேட்டை தில்லைநகர் வாசகசாலை தெருவை சேர்ந்தவர் பிரகாசம்(33). இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23), அருண்குமார்(23), இலங்கேஸ்வரன்(29) ஆகியோர் நேற்று முன்தினம் மணல்மார்கெட் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டூவீலர் மீது மோதியதுடன் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த பிரகாசம் உள்ளிட்டோர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

காரில் இருந்து இறங்கிய 4 பேரும், போலீஸ் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன், வாகனங்களை மறித்தனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசாரிடமும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வரைந்து சென்று 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கெட்டவார்த்தையால் பேசியது, மறியல் செய்தது, கையால் தாக்கியது, மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

The post தகராறு செய்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Prakasam ,Vasagasalai Street, ,Thillainagar ,Ponnammappet ,Manikandan ,Arunkumar ,Ilangeswaran ,Sandalmarket ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு