×

அலாரம் வைத்து பிடித்த மக்கள் ஒரே கோயிலில் 4வது முறையாக திருட வந்த ஆசாமி அதிரடி கைது: சாமி சிலைகள் பறிமுதல்

மேலூர், மார்ச் 26: மேலூர் யூனியன் அலுவலகம் எதிரே முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பாதுகாப்பு அறையில் வெண்கலத்தால் ஆன முருகன், வள்ளி உள்ளிட்ட சாமி சிலைகள், பூஜைக்கு தேவையான குத்துவிளக்கு, சூட தட்டு, கோயில் மணி உட்பட 150 கிலோ பித்தளை பொருட்கள் இருந்தன. இதில் இருந்து அவ்வப்போது பொருட்கள் திருடு போனது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாமி சிலைகளும் திருடு போனது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் மேலூர் போலீசில் ஏற்கனவே 2 முறை புகார் அளித்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலின்படி கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அலாரம் செட் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பகலில் சுவர் ஏறி குதித்த மர்மநபர் ஒருவர் முதலில் சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, உள்ளே இறங்கினார்.

இதையடுத்து அலரம் அடித்துள்ளது. இதனால் எச்சரிக்கையடைந்த மக்கள் மர்ம நபரை தேட துவங்கினர். அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து கட்டி வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர். மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்து விசாரித்தார். இதில், அந்த நபர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த சாமியப்பன் மகன் பொன்னுச்சாமி(62) என தெரிய வந்தது. இவர் ஏற்கனவே இக்கோயிலில் 3 முறை திருடியதும், தற்போது 4வது முறையாக திருடிய போது பிடிபட்டதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 2 அடி முருகன் சிலை, ஒன்றரை அடி வள்ளி சிலை கைப்பற்றப்பட்டது. மேலும் திருடு போன பொருட்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம் ஒழுங்குமுறை கூடம் இணைகிறது

 

வேளாண் இணை இயக்குநர் தகவல்

மதுரை, மார்ச் 26: மதுரை மாவட்ட வேளாண் விற்–ப–னைக்–குழு இணை இயக்–கு–நர் விவே–கா–னந்–தன் கூறு–கை–யில், ‘‘மதுரை மற்–றும் உசி–லம்–பட்டி ஒழுங்–கு–முறை விற்–ப–னைக்–கூ–டங்–க–ளில் மின்–னணு சந்–தைத்–திட்–டம் மூலம் விவ–சா–யி–கள் தங்–க–ளது விளை–பொ–ருள்–களை இடைத்–த–ர–கர் இன்றி விற்–பனை செய்து வரு–கின்–ற–னர். இதில் விவ–சா–யி–களுக்கு அதிக லாபம் கிடைக்–கி–றது. இதற்–கான உரிய தொகை விவ–சா–யி–க–ளின் வங்கி கணக்–கில் 48 மணி நேரத்–தில் வரவு வைக்–கப்–ப–டு–கி–றது. வாடிப்–பட்டி, மேலூர், திரு–மங்–க–லம் ஆகிய ஒழுங்–கு–முறை விற்–ப–னைக்–கூ–டங்–களும் விரை–வில் இத்–திட்–டத்–தில் இணைக்–கப்–ப–ட–வுள்–ளது. இது–தொ–டர்–பான மின்–னணு பரி–வர்த்–தனை திறன்–மேம்–பாட்–டுப் பயிற்–சி–யா–னது விற்–ப–னைக்–குழு உரி–மம் பெற்ற வணி–கர்–களுக்–கும், தோட்–டக்–க–லைத்–துறை அலு–வ–லர்–களுக்–கும், வேளாண் விற்–பனை மற்–றும் வணிக அலு–வ–லர்–களுக்–கும், விரி–வாக்க அலு–வ–லர்–களுக்–கும் நடத்–தப்–பட்–டுள்–ளது.’’ என்–றார்.

இதற்–காக நடந்த ஆய்–வுக்–கூட்–டத்–தில், வேளாண் இணை இயக்–கு–நர் விவே–கா–னந்–தன், விற்–பனை மற்–றும் வணிக இணை இயக்–கு–நர் விஜ–ய–லெட்–சுமி, தோட்–டக்–கலை துணை இயக்–கு–நர் ரேவதி, துணை இயக்–கு–நர் அமு–தன் உள்–ளிட்–டோர் கலந்து கொண்–ட–னர்.

விவ–சா–யி–கள் மற்–றும் வணி–கர்–கள் e-NAM திட்–டத்–தினை பயன்–ப–டுத்தி பயன்–பெற வேண்–டும் என விற்–ப–னைக்–குழு செய–லா–ளர் மெர்சி ஜெய–ராணி அறி–வு–றுத்–தி–யுள்–ளார்.

 

 

 

 

இன்று வருமுன் காப்போம் முகாம்

அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைக்கிறார்

மதுரை, மார்ச் 26: மதுரை மாந–க–ராட்சி மண்–ட–லம் 2க்கு உட்–பட்ட வண்–டி–யூர் தாகூர் வித்–யா–லயா மெட்–ரிக்–கு–லே–சன் மேல்–நி–லைப்–பள்ளி மற்–றும் மண்–ட–லம் 4க்கு உட்–பட்ட சேது–ரா–ஜன் பத்மா மெட்–ரிக்–கு–லே–சன் மேல்–நி–லைப்–பள்ளி ஜீவா நகர் மெயின் ரோடு ஆகிய பகு–தி–க–ளில் கலை–ஞ–ரின் வரு–முன் காப்–போம் திட்–டம் சிறப்பு மருத்–துவ முகாம் இன்று நடை–பெ–று–கி–றது. இதனை வணி–க–வரி மற்–றும் பதி–வுத்–துறை அமைச்–சர் பி.மூர்த்தி, மேயர் இந்–தி–ராணி துவக்கி வைக்–கின்–ற–னர். காலை 9 மணி முதல் 4 மணி வரை நடை–பெ–றும் முகா–மில் மாவட்ட கலெக்–டர் அனீஷ்–சே–கர், மாந–க–ராட்சி கமி–ஷ–னர் கார்த்–தி–கே–யன், துணை மேயர் டி.நாக–ரா–ஜன் பங்–கேற்–கின்–ற–னர்.

 

 

கள்ளர் சீரமைப்புத்துறை

இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

 

 

மதுரை, மார்ச் 26: கள்–ளர் சீர–மைப்பு நிர்–வா–கத்–தில் பணி–பு–ரி–யும் வெளி மாவட்ட ஆசி–ரி–யர்–களுக்கு துறை மாறு–த–லுக்–கான தடை–யின்மை சான்று வழங்க கோரி, தமிழ்–நாடு முது–நிலை பட்–ட–தாரி ஆசி–ரி–யர் கழ–கம் மற்–றும் தமிழ்–நாடு உயர்–நிலை மற்–றும் மேல்–நிலை பட்–ட–தாரி ஆசி–ரி–யர் கழ–கத்–தி–னர்(கள்–ளர் பள்ளி கிளை) மது–ரை–யில் நேற்று உண்–ணா–வி–ர–தம் மேற்–கொண்–ட–னர். மதுரை பழங்–கா–நத்–தம் ரவுண்–டானா அரு–கில் நடந்த உண்–ணா–வி–ரத போராட்–டத்–திற்கு சங்–கத்–தின் மதுரை மாவட்ட தலை–வர் ரங்–க–நா–தன் தலைமை வகித்–தார். தமிழ்–நாடு முது–நிலை பட்–ட–தாரி ஆசி–ரி–யர் கழக மதுரை மாவட்ட தலை–வர் பாபு பிரேம்–க–மார், செய–லா–ளர் கார்த்–தி–கே–யன், பொரு–ளா–ளர் முத்–துக்–கு–மார், கள்–ளர் பள்–ளி–கள் மாவட்ட செய–லா–ளர் முரு–கன், பொரு–ளா–ளர் அருள்–வி–ஜய் முன்–னிலை வகித்–த–னர். தமிழ்–நாடு உயர்–நிலை-மேல்–நி–லைப் பள்ளி பட்–ட–தாரி ஆசி–ரி–யர் கூட்–ட–மைப்–பின் தலை–வர் மாய–வன், இந்–திய பள்ளி ஆசி–ரி–யர் கூட்–ட–மைப்–பின் அகில இந்–திய செய–லா–ளர் சுரேஷ், தமிழ்–நாடு முது–நிலை பட்–ட–தாரி ஆசி–ரி–யர் கழக மாநில தலை–வர் பெரு–மாள்–சாமி, மாநில ெபாரு–ளா–ளர் அன்–ப–ழ–கன், மாநில சட்ட செய–லா–ளர் நவ–நீ–த–கி–ருஷ்–ணன் மற்–றும் தே.முரு–கன் ஆகி–யோர் சிறப்–பு–ரை–யாற்–றி–னர்.

உண்–ணா–வி–ர–தம் நிறை–வ–டைந்–த–பின் அனை–வ–ரும், அண்ணா பஸ் நிலை–யம் அருகே உள்ள கள்–ளர் சீர–மைப்–புத்–துறை இணை இயக்–கு–னர் அலு–வ–ல–கம் முன் திடீ–ரென போராட்–டத்–தில் ஈடு–பட்–ட–தால் பர–ப–ரப்பு ஏற்–பட்–டது.

 

 

 

 

இன்று நடக்கிறது

 

திரு–மங்–க–லம், மார்ச் 26: திரு–மங்–க–லம் நக–ராட்சி தலை–வர் மற்–றும் துணைத்–த–லை–வர் தேர்–த–லை–யொட்டி நகர்–மன்ற அலு–வ–ல–கத்–தில் கண்–கா–ணிப்பு கேம–ராக்–கள் பொருத்–தப்–பட்–டுள்–ளன.

திரு–மங்–க–லம் நக–ராட்சி தலை–வர் மற்–றும் துணைத்–த–லை–வர் தேர்–தல் ஏற்–க–னவே நடந்–த–போது போது–மான கவுன்–சி–லர்–கள் வரா–த–தால் ஒத்–தி–வைக்–கப்–பட்–டது. தற்–போது மாநில தேர்–தல் ஆணை–யம் இன்று தேர்–தல் நடை–பெ–றும் என அறி–வித்–துள்–ளது. இதனை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு தலை–வர் தேர்–த–லும், 2.30 மணிக்கு துணைத்–த–லை–வர் தேர்–த–லும் நடை–பெற உள்–ளது. தேர்–தல்–அ–தி–கா–ரி–யாக திரு–மங்–க–லம் ஆர்–டிஓ அனிதா நிய–மிக்–கப்–பட்–டுள்–ளார். தேர்–த–லை–யொட்டி நக–ராட்சி அலு–வ–ல–கத்–தில் நான்–கிற்கு மேற்–பட்ட கண்–கா–ணிப்பு கேம–ராக்–கள் பொருத்–தப்–பட்–டுள்–ளன. வாக்–கு–ப–திவு நடை–பெ–றும் பகுதி, வாக்–கு–பெட்டி தயா–ராக உள்–ளது. தேர்–தல் குறித்து நக–ராட்சி கவுன்–சி–லர்–கள் அனை–வ–ருக்–கும் தக–வல் அளிக்–கப்–பட்–டுள்–ள–தாக நக–ராட்சி அறி–வித்–துள்–ளது. நக–ராட்சி தலை–வர் தேர்–த–லை–யொட்டி நக–ராட்சி அலு–வ–ல–கத்–தில் பாது–காப்பு பணி–யில் ஏரா–ள–மான போலீ–சார் நிய–மிக்–கப்–பட்–டுள்–ள–னர்.

 

 

அலாரம் வைத்து பிடித்த மக்கள்

ஒரே கோயிலில் 4வது முறையாக திருட வந்த ஆசாமி அதிரடி கைது

 

சாமி சிலைகள் பறிமுதல்

மேலூர், மார்ச் 26: மேலூர் யூனி–யன் அலு–வ–ல–கம் எதிரே முத்–து–மா–ரி–யம்–மன் கோயில் உள்–ளது. இக்–கோ–யி–லின் பாது–காப்பு அறை–யில் வெண்–க–லத்–தால் ஆன முரு–கன், வள்ளி உள்–ளிட்ட சாமி சிலை–கள், பூஜைக்கு தேவை–யான குத்–து–வி–ளக்கு, சூட தட்டு, கோயில் மணி உட்–பட 150 கிலோ பித்–தளை பொருட்–கள் இருந்–தன. இதில் இருந்து அவ்–வப்–போது பொருட்–கள் திருடு போனது.

கடந்த 10 நாட்–களுக்கு முன்பு சாமி சிலை–களும் திருடு போனது. இது குறித்து கோயில் நிர்–வா–கத்–தி–னர் மேலூர் போலீ–சில் ஏற்–க–னவே 2 முறை புகார் அளித்–துள்–ள–னர். போலீ–சார் அறி–வு–றுத்–த–லின்–படி கோயி–லில் சிசி–டிவி கேமரா பொருத்–தப்–பட்டு, அலா–ரம் செட் செய்–யப்–பட்–டது.

இந்–நி–லை–யில் நேற்று பக–லில் சுவர் ஏறி குதித்த மர்–ம–ந–பர் ஒரு–வர் முத–லில் சிசி–டிவி கேம–ராவை உடைத்–து–விட்டு, உள்ளே இறங்–கி–னார். இதை–ய–டுத்து அல–ரம் அடித்–துள்–ளது. இத–னால் எச்–ச–ரிக்–கை–ய–டைந்த மக்–கள் மர்ம நபரை தேட துவங்–கி–னர். அங்கு பதுங்–கி–யி–ருந்த நபரை பிடித்து கட்டி வைத்து போலீ–சுக்கு தக–வல் அளித்–த–னர். மேலூர் இன்ஸ்–பெக்–டர் சார்–லஸ் சம்–பவ இடத்–திற்கு வந்து கைது செய்து விசா–ரித்–தார். இதில், அந்த நபர் விரு–து–ந–கர் மாவட்–டம், ராஜ–பா–ளை–யத்தை சேர்ந்த சாமி–யப்–பன் மகன் பொன்–னுச்–சாமி(62) என தெரிய வந்–தது. இவர் ஏற்–க–னவே இக்–கோ–யி–லில் 3 முறை திரு–டி–ய–தும், தற்–போது 4வது முறை–யாக திரு–டிய போது பிடி–பட்–ட–தும் தெரிய வந்–தது.

அவ–ரி–ட–மி–ருந்து 2 அடி முரு–கன் சிலை, ஒன்–றரை அடி வள்ளி சிலை கைப்–பற்–றப்–பட்–டது. மேலும் திருடு போன பொருட்–கள் குறித்து தொடர்ந்து விசா–ரணை நடை–பெற்று வரு–கி–றது.

 

 

மேலூர் அருகே

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

 

10 பேர் காயம்

மேலூர், மார்ச் 26: மேலூர் அருகே கோவில் திரு–வி–ழாவை முன்–னிட்டு நேற்று நடை–பெற்ற மஞ்–சு–வி–ரட்–டில் 10 பேர் காய–ம–டைந்–த–னர்.

மேலூர் கொட்–டாம்–பட்டி அருகே வி.புதூ–ரில் உள்ள முத்–து–பி–டாரி அம்–மன், முடி–ம–லை–யாண்டி, வேப்–பி–லைக்–காரி அம்–மன் கோயில் திரு–வி–ழாவை முன்–னிட்டு நேற்று மஞ்–சு–வி–ரட்டு போட்டி நடை–பெற்–றது. இந்த மஞ்–சு–வி–ரட்–டில் மதுரை, திண்–டுக்–கல், சிவ–கங்கை, புதுக்–கோட்டை மாவட்–டங்–களை சேர்ந்த 200க்கும் மேற்–பட்ட காளை–கள் கலந்து கொண்–டன. கிரா–மத்–தின் சார்–பில் ஜவுளி பொட்–ட–லங்–கள் சுமந்து வரப்–பட்டு, காளை–களுக்கு முதல் மரி–யாதை செலுத்–தப்–பட்–டது. அதனை தொடர்ந்து ஒவ்–வொரு காளை–க–ளாக அவிழ்த்து விடப்–பட்–டன. சீறி பாய்ந்த காளை–களை வீரர்–கள் அடக்க முயன்–ற–னர். இதில் மாடு பிடித்–த–வர்–கள் மற்–றும் பார்–வை–யா–ளர்–கள் என 10க்கும் மேற்–பட்–ட–வர்–களுக்கு காயம் ஏற்–பட்–டது. கொட்–டாம்–பட்டி போலீ–சார் பாது–காப்பு பணி–யில் ஈடு–பட்–டி–ருந்–த–னர்.

 

 

 

 

ரூ.12 லட்சம் செல்போன்கள் மீட்பு

 

மதுரை, மார்ச் 26: மதுரை மாந–கர காவல் துறைக்கு உட்–பட்ட தெற்–கு–வா–சல், திடீர்–ந–கர், தல்–லா–கு–ளம், செல்–லூர், அண்–ணா–ந–கர் உள்–ளிட்ட காவல்–நி–லை–யங்–க–ளில் கடந்த சில மாதங்–க–ளில் பதி–வான செல்–போன் திருட்டு வழக்–கு–கள் மீது உட–னடி நட–வ–டிக்கை எடுக்க மாந–கர போலீஸ் கமி–ஷ–னர் உத்–த–ர–விட்–டி–ருந்–தார். இந்–நி–லை–யில், சைபர் கிரைம் மற்–றும் மாந–கர குற்–றப்–பி–ரிவு போலீ–சா–ரின் நட–வ–டிக்–கை–யால் தொலைந்து போன ரூ.12 லட்–சம் மதிப்–பி–லான 117 செல்–போன்–கள் மீட்–கப்–பட்–டன. மீட்–கப்–பட்ட விலை–யு–யர்ந்த செல்–போன்–க–ளின் உரி–மை–யா–ளர்–கள் அடை–யா–ளம் காணப்–பட்–டது. மதுரை கே.புதூர் காவல்–நி–லை–யத்–தில் வைத்து 117 பேருக்–கும் நேற்று நேர–டி–யாக செல்–போன்–கள் வழங்–கப்–பட்–டன. இதனை மதுரை போலீஸ் துணை கமி–ஷ–னர்–கள் தங்–க–துரை, ராஜ–சே–க–ரன் ஆகி–யோர் பொது–மக்–க–ளி–டம் வழங்–கி–னர். மொபைல் போன் திரு–டு–போ–னாலோ அல்–லது தொலைந்–தாலோ உட–ன–டி–யாக அந்–தந்த காவல்–நி–லை–யங்–க–ளில் புகார் அளித்–தால் உட–ன–டி–யாக நட–வ–டிக்கை மேற்–கொள்–ளப்–ப–டும் என போலீ–சார் அறி–வு–றுத்–தி–னர்.

 

 

 

 

 

 

அப்–ப–ளம் விலை உயர்வு

மதுரை அப்–ப–ளம் வட–கம் மோர் வத்–தல் சங்க மாநி–லத் தலை–வர் திரு–மு–ரு–கன் கூறு–கை–யில், ‘‘அப்–ப–ளம் சார்ந்த மூலப்–பொ–ருட்–கள் விலை கடு–மை–யாக உயர்ந்து உள்–ளது. அதி–லும் உளுந்–தம் பருப்பு, பேப்–பர், அட்–டைப்–பெட்டி, சோடி–யம் பை கார்–ப–னேட் உட்–பட அனைத்து மூலப்–பொ–ருட்–களும் 25 சத–வீ–தம் வரை விலை உயர்ந்–துள்–ளது. கொரோ–னா–வில் இருந்து மீண்டு கொஞ்–சம் கொஞ்–ச–மாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டு உள்–ளோம். இந்–நி–லை–யில் விலை–வாசி ஏற்–றத்–தால் அப்–ப–ளம் விலையை 25 சத–வீ–தம் வரை அதி–க–ரிக்க வேண்–டிய கட்–டா–யத்–தில் உள்–ளோம். மூலப்–பொ–ருட்–க–ளின் விலை ஏற்–றத்தை கட்–டுக்–குள் கொண்டு வர–வேண்–டும்–’’ என்–றார்.

ரூ.11.50 லட்–சம் மோசடி

மதுரை ஊமச்–சிக்–கு–ளம் பகு–தி–யைச் சேர்ந்–த–வர் சந்–தி–ரன். இவ–ரும் அதே பகு–தி–யைச் சேர்ந்த வடி–வேல் என்–ப–வ–ரும் ஒன்–றாக ரியல் எஸ்–டேட் தொழில் செய்து வந்–த–னர். இதில் நிலம் வாங்–கு–வது தொடர்–பாக சந்–தி–ரன், வடி–வே–லு–விற்கு ரூ.11.50 லட்–சம் வழங்–கி–யுள்–ளார். இதனை பெற்று கொண்ட அவர் நிலத்தை வாங்கி கொடுக்–க–வில்லை. பணத்–தை–யும் திரும்ப கொடுக்–க–வில்லை. இதனை கேட்–ட–போது, மிரட்–டல் விடுத்–துள்–ளார். இது–கு–றித்து அவர் தல்–லா–கு–ளம் போலீ–சில் புகார் அளித்–தார். புகா–ரின் பேரில் போலீ–சார் வடி–வேல் மீது வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரித்து வரு–கின்–ற–னர்.

குன்றத்தில் ரூ.28 லட்சம் வசூல்

திருப்–ப–ரங்–குன்–றம் சுப்–பி–ர–ம–ணி–ய–சு–வாமி கோயி–லில் பக்–தர்–கள் வழங்–கிய உண்–டி–யல் காணிக்கை எண்–ணும் பணி நேற்று நடை–பெற்–றது. இதில்  கோயில் துணை ஆணை–யர் கலை–வா–ணன்,  உதவி ஆணை–யர் விஜ–யன், மீனாட்சி அம்–மன் கோயில் கண்–கா–ணிப்–பா–ளர் சுந்–தரி  உள்–ளிட்ட  அலு–வ–லர்–கள், கோயில் ஊழி–யர்–கள் மற்–றும் வேத பாட–சாலை மாண–வர்–கள், ஐயப்ப சேவா சங்–கத்–தி–னர் ஈடு–பட்–ட–னர். நேற்று காலை முதல் மாலை வரை  உண்–டி–யல் காணிக்கை எண்–ணும் பணி நடை–பெற்–றது. இதில் 28 லட்–சத்து  31 ஆயி–ரத்து  442 ரூபா–யும்,  170 கிராம் தங்–க–மும்,  1 கிலோ 950 கிராம் வெள்–ளி–யும் காணிக்–கை–யாக இருந்–த–தாக கோயில் நிர்–வா–கத்–தின் சார்–பில் தெரி–விக்–கப்–பட்–டது.

மாணவி கர்ப்–பம், மாண–வன் கைது

திரு–மங்–க–லத்–தைச் சேர்ந்–த–வர் பாண்–டி–ய–ரா–ஜன். கல்–லூரி படித்து வரு–கி–றார். இவர் பிளஸ் 2 மாண–வியை திரு–மண ஆசை கூறி கர்ப்–ப–மாக்–கி–னார். இதன்–பி–றகு திரு–ம–ணம் செய்ய மறுத்–து–விட்–டார். இது குறித்து மாணவி அளித்த புகா–ரின் அடிப்–ப–டை–யில் போக்சோ சட்–டத்–தின் கீழ் வழக்கு பதிவு செய்த உசி–லம்–பட்டி அனைத்து மக–ளிர் காவல்–நி–லைய காவல் ஆய்–வா–ளர் சிவ–சக்தி, கல்–லூரி மாண–வன் பாண்–டி–ய–ரா–ஜனை கைது செய்து தொடர் விசா–ரணை மேற்–கொண்டு வரு–கின்–ற–னர்.

ஒன்–றிய கவுன்–சி–லர்–கள் கூட்–டம்

திருப்–ப–ரங்–குன்–றம் யூனி–யன் அலு–வ–ல–கத்–தில் நேற்று ஒன்–றிய கவுன்–சி–லர்–கள் கூட்–டம் யூனி–யன் சேர்–மன் வேட்–டை–யன் தலை–மை–யில் நடை–பெற்–றது. இதில் பிடி–ஓக்–கள் உத–ய–கு–மார், ராமர் மற்–றும் அலு–வ–லர்–கள் கலந்து கொண்–ட–னர். இந்த கூட்–டத்–தில் திமுக, அதி–மு–கவை சேர்ந்த ஒன்–றிய கவுன்–சி–லர்–கள் கலந்து கொண்டு தங்–கள் வார்–டு–களுக்கு உட்–பட்ட பகு–தி–க–ளில் மேற்–கொள்ள வேண்–டிய வளர்ச்சி பணி–கள் குறித்து விவா–தித்–த–னர். அதி–முக கவுன்–சி–லர் நிலை–யூர் முரு–கன் உட்–பட கவுன்–சி–லர்–க–ளின் கோரிக்கை மற்–றும் கேள்–விக்கு திமுக சேர்–மன் வேட்–டை–யன் பதி–ல–ளித்–தார்.

ரூ.10.80 லட்–சம் மோசடி

மதுரை எஸ்.எஸ்.காலனி பகு–தி–யில் தனி–யார் நிதி நிறு–வ–னம் செயல்–பட்டு வரு–கி–றது. இந்த நிறு–வ–னத்–தில் அதே பகு–தி–யைச் சேர்ந்த சந்–தோஷ் கண்–ணன் மண்–டல மேலா–ள–ராக பணி–யாற்றி வரு–கி–றார். திண்–டுக்–கல் எஸ்.பாறைப்–பட்டி பகு–தி–யைச் சேர்ந்த கார்த்–திக் என்–ப–வர் ஏரியா மேலா–ள–ராக பணி–யாற்றி வரு–கி–றார். இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்–போது வரை நிதி நிறு–வ–னத்–திற்கு வசூ–லான ரூ.10 லட்–சத்து 80 ஆயி–ரத்தை செலுத்–தா–மல் மோசடி செய்–த–தாக தெரி–கி–றது. இது குறித்து மேலா–ளர் சந்–தோஷ் கண்–ணன் எஸ்.எஸ்.காலனி போலீ–சில் புகார் அளித்–தார். புகா–ரின்
பேரில் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரித்து வரு–கின்–ற–னர்.

ரேஷன் அரிசி, கோதுமை பறி–மு–தல் 

மது–ரை–யில் இருந்து திரு–மங்–க–லம் செல்–லும் ரிங்–ரோட்–டில் ரேஷன் அரிசி கடத்–தப்–ப–டு–வ–தாக மதுரை உணவு தடுப்பு பிரிவு போலீ–சா–ருக்கு ரக–சிய தக–வல் வந்–தது. இதனை தொடர்ந்து வாகன தணிக்–கை–யில் ஈடு–பட்–ட–னர். மண்–டே–லா–ந–கர் அரு–கே–யுள்ள ஈச–னேரி பஸ்ஸ்–டாப் அருகே வேக–மாக வந்த மினி–வேனை நிறுத்தி சோத–னை–யிட்–ட–னர். அதில் தலா 50 கிலோ எடை–யுள்ள 80 மூட்–டை–க–ளில் ரேஷன் அரிசி 4000 கிலோ–வும், தலா 50 கிலோ எடை–யுள்ள 20 மூட்–டை–க–ளில் 1000 கிலோ கோது–மை–யும் இருந்–தன. அவற்றை பறி–மு–தல் செய்த உணவு தடுப்பு பிரிவு போலீ–சார் அரிசி ஆலை உரி–மை–யா–ளர் மது–ரையை சேர்ந்த ரகு(24), மதுரை சத்–ய–சாய்–ந–கரை சேர்ந்த சோவி–யத்(23) ஆகி–யோரை கைது செய்து வேனை–யும் பறி–மு–தல் செய்–த–னர்.

காச–நோய் விழிப்–பு–ணர்வு

உலக காச–நோய் தினத்தை முன்–னிட்டு, மதுரை ஆஸ்–டின்–பட்–டி–யில் உள்ள நெஞ்–சக நோய்க்–கான அரசு மருத்–து–வ–ம–னை–யில் காச நோய் குறித்த விழிப்–பு–ணர்வு நிகழ்ச்சி நடந்–தது. நிலைய மருத்–துவ அதி–காரி காந்–தி–மதி நாதன் தலைமை வகித்–தார். டாக்–டர் பால–கு–ரு–சாமி சிறப்–பு–ரை–யாற்–றி–னர். சிஎஸ்ஐ மருத்–து–வக்–கல்–லூரி மாண–வர்–க–ளின் கலை நிகழ்ச்–சி–கள் நடை–பெற்–றன. காச நோயி–னால் பாதிக்–கப்–பட்டு குண–ம–டைந்த நோயா–ளி–களும் கலந்து கொண்–ட–னர். நிகழ்ச்–சி–யில் டாக்–டர்–கள் ஜெய்–க–ணேஷ், இளம்–ப–ருதி, செந்–தில்–கு–மார், பால–கிஷ்–ணன், சுதா–மதி உட்–பட பலர் பங்–கேற்–ற–னர்.

 

 

 

Tags : Assamese ,Sami ,
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது