ஆத்தூர் அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு

ஆத்தூர், மார்ச் 24: ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் உள்ள துலுக்கனூர் ஏரிக்கரையில், 60வயது மதிக்க தக்க முதியவர் சடலம் நேற்று மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஆத்தூர் டவுன் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்தவர் துலுக்கனூர் அண்ணா நகரை சேர்ந்த கணேசன்(59) என்பதும், திருமணமான அவர் மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: