ஆத்தூர் நகரப்பகுதியில் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

ஆத்தூர், மார்ச் 24: ஆத்தூர் நகரப்பகுதியில் காந்திநகர், ஜோதிநகர், ராஜாஜூ காலனி, உடையார்பாளையம், கடைவீதி உள்ளிட்ட பகுதியில் அதிக அளவிலான குரங்குகள் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி நகரப்பகுதில் முகாமிட்டுள்ளன. இந்த குரங்குகள் கூட்டமாக வீடுகளுக்குள் நுழைந்து, அட்டகாசம் செய்து உணவு பொருட்களை எடுத்து செல்வதும், குழந்தைகளையும், வயதானவர்களையும் அச்சுறுத்தியும் வருவதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். நேற்று காந்திநகர், உடையார்பாளையம், சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், நகரமன்ற உறுப்பினர் கலைச்செல்வியை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, அவர் ஆத்தூர் ஆர்டிஓ சரண்யாவை சந்தித்து, பொதுமக்களின்  கோரிக்கையை மனுவாக வழங்கினார். அதனை பெற்று கொண்ட ஆர்டிஓ, வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ளனர்.

Related Stories: