×

கூட்டுறவு இணை பதிவாளர் தகவல் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா ரூ.95 லட்சத்தில் புனரமைக்கப்படும்


ஊட்டி, மார்ச் 24:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டேவிஸ் பூங்கா ரூ.95 லட்சம் செலவில் புனரமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நகராட்சி பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்ட நிலையில், பெரும்பாலான பூக்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. சில பூங்காக்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறின. இந்நிலையில், கடந்த 2009-10ம் ஆண்டில் நகராட்சிக்குட்பட்ட கோத்தகிரி சாலையில் உள்ள பூங்கா, டேவிஸ், பாறை முஜீஷ்வரர் கோயில், போஸ் திடல் பூங்கா உட்பட 5 பூக்காக்களை பல லட்சம் செலவில் நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. மேலும், செயற்கை நீரூற்று உட்பட பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த பூங்காக்களை பராமரிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. பூங்காக்கள் அனைத்தும் தற்போது புதர் மண்டி கிடக்கிறது. பல பூங்காக்கள் மீண்டும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதில், டேவிஸ் பூங்கா, பஸ் நிலையம் பூங்கா போன்றவை மிகவும் மோசமான நிலையில், உள்ளன. எனவே, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து சிறிய பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக ஊட்டி கலெக்டர் அலுவலகம் அகேயுள்ள டேவிஸ் பூங்கா ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது. மீண்டும் இந்த பூங்கா சீரமைக்கப்பட்டு மலர் நாற்றுக்கள் நடவு செய்யவும், அங்கு செயற்கை நீரூற்றுகள் பழுது பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பூங்காவிற்குள் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், இருக்கைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன் கூறுகையில்,``ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டேவிஸ் பூங்கா மிகவும் மோசமாக உள்ள நிலையில் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பில் இப்பூங்கா சீரமைக்கப்படும். பூங்காவில் உள்ள நீரூற்றுகள், நடைபாதைகள், இருக்கைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Tags : Davis Park ,Ooty Collector's Office ,
× RELATED டேவிஸ் பூங்காவை முறையாக பராமரிக்க சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை