×

நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம்

சென்னை, மார்ச் 24: சட்டப்ரேவையில் கேள்வி நேரத்தின் போது நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது: நெய்வேலி சட்டமன்ற தொகுதி கடந்த 2011ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. இந்த சட்டமன்ற தொகுதியில் வட்டாட்சியர் அலுவலம் தனியாக இல்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு 10 வட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் 3,25,000 மக்கள் வசித்து வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் முதல்வர்” நிகழ்ச்சிக்கு வந்த போது, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து விட்டு வந்தார். அப்படி அந்த மாவட்டம் தனியாக அமைக்கப்படும் போது, நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு என்று நெய்வேலி வட்டாட்சியர் அலுவலம் தனியாக அமைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: நான் ஓர் அமைச்சராக இருந்தாலும் கூட சட்டமன்ற உறுப்பினர்.

அவர்களுடைய பகுதியில் தாலுகா அலுவலகம் அமைய வேண்டும் என்பது அப்பகுதி மக்களுடைய கோரிக்கை. ஒரு காலத்தில் தாலுகா அலுவலகத்திற்கு போகக்கூடிய பணிகள் குறைவாக இருந்தன. தற்போது தாலுகா அலுவலகங்களுக்கு போக வேண்டிய காரணங்கள் நிறைய இருக்கிறபடியால், அந்தந்த பகுதிகளில் சிறிய வட்டத்திற்குள்ளாக, தாலுகா அலுவலகங்கள் அமைந்தால் தான் பொதுமக்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்ய முடியும் என்று திமுக அரசு எண்ணியிருக்கிறது. இதுகுறித்து நிச்சயமாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Tags : New Governor's Office ,Neyveli ,Assembly ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...