விழுப்புரம் அருகே பெட்மார்ட்டில் தீ விபத்தில் ₹1 லட்சம் இலவம் பஞ்சுகள் எரிந்து சாம்பல்

விழுப்புரம், மார்ச் 24: விழுப்புரம் அருகே பெட்மார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவம் பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின. விழுப்புரம்  அருகே  நல்லரசன்பேட்டையைச் சேர்ந்தவர் கவுஸ்பாஷா. கிழக்குபாண்டிேராட்டில்   பெட்மார்ட் நடத்தி வருகிறார். இதனிடையே, நேற்று பெட்மார்ட்டுக்கு பின்புறம்   உள்ள இலவம்பஞ்சு குடோனில் ஊழியர்கள் மின்மோட்டாரை இயக்கியபோது  அதிலிருந்து  மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஊழியர்கள்   அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர், தண்ணீரை ஊற்றி   அணைக்கமுயற்சித்தபோது பஞ்சு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்துவந்த விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை   பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் சுமார்   ரூ.1 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து வளவனூர்   போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: