×

ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் 2860 மூட்டை பருத்தி ₹90 லட்சத்திற்கு விற்பனை

ராசிபுரம், மார்ச் 22: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று ₹90 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (ஆர்.சி.எம்.எஸ்) சார்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்.சி.எச் ரகம் 2581 மூட்டை, டி.சி.எச் ரகம் 206 மூட்டை, கொட்டு 82 மூட்டைகள் என மொத்தம் 2869 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தது. இதில் ஆர்.சி.எச் ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ₹10,355க்கும், அதிகபட்சம் ₹11,219க்கு விற்பனையானது. டி.சி.எச் ரகம் குறைந்தபட்சம் ₹9,813க்கும், அதிகபட்சம் ₹12.110 விற்பனையானது. கொட்டு குறைந்தபட்சம் ₹3,800க்கும், அதிகபட்சம் ₹6,800க்கும் விற்பனையானது. மொத்தம் ₹90 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags : Rasipuram Co-operative Society ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா