×

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை சரிவு

ஒட்டன்சத்திரம், மார்ச் 22: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கடந்த மாதங்களில் ஒருகிலோ மரமுருங்கை ரூ.150க்கும், செடி முருங்கை ரூ.170க்கும், கரும்பு முருங்கை ரூ.200க்கும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ மரமுருங்கை ரூ.20க்கும் செடி முருங்கை ரூ.28க்கும், கரும்பு முருங்கை ரூ.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கொண்டுவரப்படும் முருங்கை கேரளா, மும்பை, பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்