×

பங்குனி உத்திரவிழா கோலாகலம் முருகன் கோயில்களில் மக்கள் குவிந்தனர்

மோகனூர், மார்ச் 19: பங்குனி உத்திர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி கோயில் மேற்கு பார்த்தவாறு உள்ளது. பழநியை போல் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் சுவாமி, ஜோதிட ஞானம் வழங்க கூடிய கடவுளாக பக்தர்களால் நம்பப்படுகிறார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், காவடி, இளநீர் காவடி எடுத்து வந்தனர்.

பின்னர், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags : Panguni Ordination People ,Murugan ,
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...