×

இருக்கன்குடி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.60 லட்சம் வசூல்

சாத்தூர், மார்ச் 1: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதம் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இம்மாதத்திற்கான உண்டியல் திறப்பு நடந்தது. 10 நிரந்தர உண்டியல், ஒரு கால்நடை உண்டியல், 2 தற்காலிக உண்டியல் திறக்கப்பட்டு கணக்கீடப்பட்டன. அதில் பக்தர்களின் காணிக்கையாக ரொக்கம் ரூ.60 லட்சத்து 74 ஆயிரத்து 429 கிடைத்தது. தங்கம் 302 கிராம் வெள்ளி 950 கிராம் கிடைத்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்து அறநிலையத்துறை விருதுநகர் கோயில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோயில் ஆணையர் கருணாகரன் தலைமையில் கோயில் டிரஸ்டி ராமமூர்த்தி மற்றும் பூசாரி, அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் பார்வையிட்டனர்.

Tags : Irukkankudi ,
× RELATED இருக்கன்குடி கோயில் முடியிறக்கும் பணியாளர்கள் ஊக்கத்தொகை வழங்க கோரி மனு