×

பொம்மிடியில் தம்பதியை தாக்கிய 3 மாணவர்கள் கைது மேலும் இருவருக்கு வலை

தர்மபுரி, பிப்.22: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே புதுஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன்(51), விவசாயி. நேற்று முன்தினம், பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தனது தோட்டத்திற்கு, மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினரான கவிதாவுடன் குமரன் நடந்து சென்றார்.
அப்போது தோட்டத்தின் நுழைவு வாயிலை மறித்து, அமர்ந்திருந்த வாலிபர்களிடம் வழிவிடுமாறு குமரன் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி கைகலப்பானது. தடுக்க வந்த புவனேஸ்வரியையும் அவர்கள் தாக்கினர். இதுகுறித்து ஊருக்குள் சென்று குமரன் தெரிவித்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் பாமகவினர் திரண்டு, பொம்மிடி ரயில் நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.குமரன், அவரது மனைவி மற்றும் உறவினரை தாக்கிய வாலிபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து இதுபற்றி அரூர் போலீசார் வழக்குப்பதிவு தம்பதியை தாக்கிய 16, 14, 15வயதுடைய 3 பள்ளி மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Pommidi ,
× RELATED தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு