×

25-வது வார்டு திமுக வேட்பாளர் தவமணி பழனியப்பன் சூறாவளி பிரசாரம் - வீடு, வீடாக வாக்குசேகரிப்பு பாதாள சாக்கடை அமைத்து தருவேன் என உறுதி

பீளமேடு, பிப். 18:  கோவை மாநகராட்சி 25-வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர்  தவமணி பழனியப்பன் போட்டியிடுகிறார். இவர், வார்டுக்கு உட்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகர், வ.உ.சி.  நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ் உள்பட வார்டின் அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று சூறாவளி  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்  தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற  செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: காந்திமாநகர் வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர  நடவடிக்கை எடுக்கப்படும். வ.உ.சி. நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், கொங்கு நகர், ருத்ரப்பா நகர் ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான பணிகள் விரைவில்  தொடங்கப்படும். இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம் என அமைச்சர் செந்தில் பாலாஜியும் உறுதியளித்துள்ளார். எனக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். காந்தி மாநகர்  வீட்டுவசதி வாரியத்தில் பஸ் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஸ் நிலையம் கொண்டுவரப்படும். தேவைக்கு ஏற்ப வார்டுக்கு புதிய பஸ் வழித்தடம்  ஏற்படுத்தப்படும்.

வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும். வார்டில், முழுநேர  அலுவலகம் அமைத்து பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். ஏழை, எளிய மக்கள்  பயன்பெறும் வகையில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும். பாதாள சாக்கடை அடைப்புகள் ஏற்படாதவகையில் புதிய குழாய்கள் அமைத்து சீர்செய்யப்படும். தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை, முதியோர்களுக்கான உதவித்தொகை, விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள்  கிடைக்க ஆவண செய்யப்படும்.

25-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை, குடிநீர்,  தெருவிளக்கு சீர்செய்து தரப்படும். தேவையான பகுதிகளில் புதிய தார்ச்சாலை மற்றும் கான்கிரீட் சாலை  அமைத்து தரப்படும். பல்வேறு சான்றிதழ்கள் பெறும் வகையில், இ-சேவை மையம் அமைத்து தரப்படும். குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும்  இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும். தேவையான இடங்களில் ஆழ்குழாய் தண்ணீர் வசதி செய்து தரப்படும். 25-வது வார்டு முழுவதும் சுழற்சி முறையில் வேலைவாய்ப்பு  முகாம், மருத்துவ முகாம், சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்படும். இவ்வாறு வேட்பாளர் தவமணி பழனியப்பன் பேசினார். பிரசாரத்தில், மணியக்காரன்பாளையம் பகுதி திமுக பொறுப்பாளர் அஞ்சுகம்  பழனியப்பன், திமுக நிர்வாகிகள் டி.கே.பழனிசாமி, தாமோதரன் மற்றும்  கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : 25th Ward DMK ,Thavamani Palaniappan ,Hurricane Campaign ,
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...