×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்

கடலூர், பிப். 17: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2003ம் ஆண்டு தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதி எண் 12, ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, உத்தரவின்படி,  நகராட்சி உள்ளாட்சி தேர்தல் -2022 நடைபெறுவதை முன்னிட்டு, 17ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 வரை, அதைத்தொடர்ந்து 22ம் தேதி முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் என்பதால், 17ம் தேதி காலை 10 மணிமுதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் 22ம் தேதி ஆகிய 4 தினங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு மதுகான கடைகள், அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடம், பார்கள் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.மேற்படி தினத்தில் மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு பார்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 பார்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3  உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.

Tags : Tasmag ,
× RELATED பொது விடுமுறை நாட்களில்...