×

மக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அரசு கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளர் அழகு ஜெயபாலான் பிரசாரம்

கோவை, பிப். 15: கோவை மாநகராட்சி 71வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அழகு ஜெயபாலன் போட்டியிடுகிறார். இவர் நேற்று 71வது வார்டுக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், சம்பந்தம் சாலை, கிளப் சாலை, வஉசி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகு ஜெயபாலன் பேசுகையில், ‘‘ஆர்.எஸ்.புரம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அரசு கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். ஆர்.எஸ்.புரம் அணைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சான்றிதழ்களை இ சேவை மையம் மூலம் இலவசமாக பெற்று தருவேன். பழுதடைந்த மோசமான சாலைகளை அகற்றி உயர்தர தார் சாலைகள் அமைத்து தரப்படும். வார்டு முழுவதும் புகார் பெட்டி அமைக்கப்படும். அந்த பெட்டிக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் வார்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணப்படும். மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக நூலகம் அமைத்து தருவேன். மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எஸ்.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் காப்பேன்’’ என்றார்.

இந்த நிகழ்வின்போது திமுக நிர்வாகிகள் வி.பி. செல்வராஜ், பழக்கடை ஆறுமுகம்,  சென்னை சசிகுமார், சிவக்குமார், கரூர் ராஜா, காதர்ஷா, சந்தோஷ், சிவக்குமார், ஜெயபிரகாஷ், கார்த்திகேயன், ராயப்பன், கரூர் அன்பழகன், யசோதா பானு, அசோக்குமார், ஆறுமுகம் நயினார், பிர்தவுஸ், மகாலட்சிமி, தீபா, பாலாஜி, நவீன், பிரபாகர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சொக்கம்புதூர் கனகராஜ், லாலி ரோடு செல்வம், காட்டூர் சோமு, சி.வி. ராஜன், செல்வபுரம் நசீர் உசேன், வெற்றி, உதயகுமார், அப்பாஸ், நடராஜ், கணபதி அசோக், ராஜ்குமார், மோகன்ராஜ், கனகராஜ், சிவாஜி லோகு, ராஜா பழனிசாமி, சிவக்குமார், சிம்மம் நாகராஜ், ரங்கசாமி, ஐ.எஸ். மணி, புருஷோத்தமன், சிவாஜி வேல் முருகன், ஏசுதாஸ் அரவிந்த், சச்சிதானந், இந்துராஜ், லலீதா மோகன்ராஜ், சதீர், கோகுல் கபில், ராஜ், சவுந்தார், சார்லஸ், காமராஜ் துல்லா, டென்னிஸ் செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Congress ,Beauty Jayapalan ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...