×

கம்மாபுரம் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

கம்மாபுரம், பிப். 11:  கம்மாபுரம் அரசுப் பள்ளிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலைய சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் எதிரில், தேவங்குடி இணைப்புச் சாலை பிரிகிறது. இச்சாலை வழியாக தேவங்குடி, கீழப்பாலையூர், க.தொழூர், தே.பவழங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மேலும், சாலையையொட்டி இருபக்கமும் வேகத்தடை இல்லாததால் உட்கிராமங்களிலிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் வருவோர் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. கடந்த வாரம் நான்கு அரசு ஊழியர்கள், 2 மாணவர்கள் உட்பட 26 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். பெரியளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அச்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கம்மாபுரத்திலிருந்து பிரியும் தேவங்குடி இணைப்புச் சாலை மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையையொட்டி இருபக்கமும் வேகத்தடை அல்லது பேரிகார்டு அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kammapuram Road ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை