×

ஆந்திரா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரியலூரில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற 4 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு

அரியலூர், பிப்.7: அரியலூரில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற 4 லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் 30 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லப்படுகிறது. இந்நிலையில் டிப்பர் லாரியில் அளவுக்கு அதிமாக சுண்ணாம்புக்கலை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளை கடுகூர் கிராம மக்கள் நேற்று சிறைப்பிடித்தனர். அக்கிராமத்தில் உள்ள வேகத்தடையில் ஒரு டிப்பர் லாரி ஏறி இறங்கியபோது சுண்ணாம்புக்கல் சாலையில் விழுந்தது. இதுபோல் தொடர்ந்து விழுவதால் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் 4 டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Andhra Pradesh ,Orissa ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்