×

அதிமுகவில் மாமனார் - மருமகள் போட்டி; திமுகவில் கணவன் - மனைவி வேட்பு மனு தாக்கல்.! கைக்குழந்தையுடன் வந்து மனு செய்த வேட்பாளர்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களாக கணவன் - மனைவி மற்றும் கைகுழந்தையுடன் வந்து வேட்பு மனு செய்தனர். அதேபோல், அதிமுகவில் மாமனார் - மருமகள் உட்பட பாஜ, பாமக உள்ளிட்ட 48 பேர் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவினர் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், திமுக சார்பில் திமுக பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் 3வது வார்டுக்கும், இவரது மனைவி ஆப்தாப்பேகம் 10வது வார்டுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

2வது வார்டுக்கு திமுகவை சேர்ந்த இந்துமதி கைகுழந்தையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். கல்பனா, சமீமா, மணிகண்டன், ஜீவா, சுமலதா, காஞ்சனா ஆகிய 9 பேர் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் பேரூர் செயலாளர் ராசமாணிக்கம் 7வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது மருமகள் ஆனந்தி 6வது வார்ட்டில்  போட்டியிடுகிறார். மேலும், ரகமத் பீ, மோகனா, ஷேக்தாவுத், கோமளா, புவனா, வள்ளி, திருநாவுக்கரசு, ரீட்டா, மணி, ஜெகதீஸ்வரன், தீபராணி, புஷ்பா, அருணாச்சலம் ஆகிய 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாஜக சாார்பில் நரேஷ், செல்வம், சிவகாமி, உமா ஆகிய 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கம்யூனிஸ்ட் சிபிஐஎம்எல் சார்பில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் கட்சியில் பாரதி ராஜமாதங்கி வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை மொத்தமாக திமுக 15, அதிமுக 15, பாஜ 9, நாம் தமிழர் 5, பாமக 3, சிபிஐஎம்எல் 2, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி தலா 1, சுயேட்சை 19 என மொத்தம் 70 பேர் வேட்பு மேனு தாக்கல் செய்துள்ளனர். ஆரணி பேரூராட்சியில் நேற்று கடைசி நாளில் திமுக, அதிமுக உட்பட 21 மனுக்களும் இதுவரை மொத்தம் 64 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : Atimugha ,DMK ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்