×

மங்கலம்பேட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு சாவு

விருத்தாசலம், பிப். 3: மங்கலம்பேட்டை அருகே உள்ள சித்தேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமல்ராஜ்(27). இவரது மனைவி எழிலரசி (23). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கமல்ராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலரசி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள், மங்கலம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அங்கு சென்ற மங்கலம்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய எழிலரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mangalampet ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை