×

தை அமாவாசை தினமான நேற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் ‘வெறிச்’

வலங்கைமான், பிப்.1: வலங்கைமான் மற்றும் குடவாசலில் தை அமாவாசை தினமான நேற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் பேரூராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது. அதனையடுத்து 28ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும் என கூறப்பட்ட நிலையில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் தை அமாவாசை தினமான நேற்று அதிக அளவில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதற்கு மாறாக வேட்பு மனு படிவத்தினை மட்டுமே அதிக அளவில் வேட்பாளர்கள் பெற்றுச் சென்றனர். இதனால் வலங்கைமான் மற்றும் குடவாசல் பேரூராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் முடிவுறாததையடுத்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் வரும் புதன்கிழமை மாநிலத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Valangaiman ,Peruradchi ,Thai New Moon day ,
× RELATED வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா