நாமக்கல்லில் விஸ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில், மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் சார்பில்,ஈரோடு கோட்ட செயலாளர் ரகுபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் நிர்வாகி சண்முகம் விஎச்பி நகர தலைவர் அருள், மாவட்ட செயலாளர் மகாதேவன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன் , கல்வியாளர் பிரணவகுமார், பாஜக ஊரக வளர்ச்சிப் பிரிவு மாநில செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.

Related Stories: